தென்னிலங்கையில் இராணுவத்தினரின் வெறியாட்டம்! மன்னிப்பு கோரும் அமைச்சர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஹம்பாந்தோட்ட, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று இராணுவத்தினரின் செயற்பாட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது ரசிகர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

5 வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் பகல் இரவு போட்டியாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்கு சென்ற ரசிகர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டமைக்கு தான் கண்டனம் வெளியிடுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.