கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! காரணம் இதுதான்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

நாட்டில் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகள் நடந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவால், விசாரணையின் பின்னர் அண்மையில் வெளியிடப்பட்ட தகவலே இதற்கான காரணமாகும்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னரும் இஸ்லாமிய அடிப்படைவாத மதகுருமார் இருவர் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக ஆணைக்குழுவின் முன் சாட்சியம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த ஜெய்னுலாப்தீன் மற்றும் மும்பாயை சேர்ந்த நாய்;க் போன்றவர்கள் இலங்கைக்கு வந்த மதபிரசாரங்களை மேற்கொண்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

சந்தேகத்துக்குரியவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர், இதனை தவிர கண்காணிப்பு கருவிகளும் மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை கண்காணிப்பு பிரிவும் குடிவரவு அதிகாரிகளும் இணைந்து விமான நிலையத்துக்குள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.