கொழும்பின் புறநகர் பகுதியில் அட்டகாசம் செய்த பொலிஸார்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதுபானம் அருந்திவிட்டு குழப்பம் ஏற்படுத்திய 4 தெஹிவளை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நால்வரும் நேற்று இரவு கல்கிஸ்ஸ பிரதேச ஹோட்டல் ஒன்றுக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து செல்லும் போது ஒரு கான்ஸ்டபிள் ஓட்டிய மோட்டார் சைக்கிள் ஹோட்டல் உரிமையாளரின் மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன்போது நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உரிமையாளருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தகராறு குழப்ப நிலையாக மாறியுள்ளது.

பின்னர் பொலிஸ் குழுவொன்று அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதுடன் குழப்பத்திற்கு காரணமான 4 பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்துள்ளனர்.