இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொவிட்-19 வைரஸினை மையமாக வைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்வதால் மக்களை அவதானமாக இருக்குமாறு, இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இளையத்தள பயனாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு COVID-19 வைரஸ் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இணையத்தள பயனாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக வெளியிட்டு வருகின்றது.

இதன் முடிவாக சைபர் தாக்குதல் மேற்கொள்வதற்காக, இரகசியமாக தகவல் திருடும் சைபர் குற்றவாளிகள் அதன் ஊடாக பணம் சம்பாதிக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

Covid-19 வைரஸ் தொடர்பில் புதிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வகையில் மின்னஞ்சலில் Microsoft Word அல்லது PDF ஒன்றை அனுப்பி அதில் Emotet எனப்படும் செயலி ஒன்றை கையடக்க தொலைபேசி அல்லது கணினிக்கு செல்லும் வகையில் இந்த கும்பல் நடவடிக்கை மேற்கொள்கின்றது.

இது தொடர்பில் உலகம் முழுவதும் பலர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், குறிப்பிடத்தக்க அளவு இலங்கை இணைய பயனாளர்களுக்கும் இந்த மின்னஞ்சல் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Covid-19 தொடர்பில் மின்னஞ்சல் தகவல் ஒன்று கிடைத்தால் அதனை திறக்க வேண்டாம் எனவும் அதனை அழித்து விடுமாறும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.