இத்தாலியிலிருந்து வந்த இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் என சந்தேகம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருமல் மற்றும் காய்ச்சல் உட்பட்ட ஏனைய குணங்குறிகளுடன் அங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் வைத்தியசாலகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமகாலத்தில் இத்தாலியில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.