இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரோனாவா? வைத்தியசாலை வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரும் அங்கொட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றிக்குள்ளாகவில்லை என வைத்தியசாலை உறுதி செய்துளளது.

பொரளை வைத்திய பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு நோயாளிகளின் இரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று காலை கிடைத்த இரத்த மாதிரி ஆய்வு அறிக்கைக்கமைய அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் இயக்குனர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் தொடர்ந்து அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.