குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகளை முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கோரியுள்ளது.
இதன்படி ஷானி அபேசேகர எதிர்வரும் மார்ச் மூன்றாம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க நேற்று தமது சாட்சியத்தை ஆணைக்குழு முன் வழங்கியிருந்தார்.
இந்த சாட்சியத்தின் அடிப்படையிலேயே ஷானி அபேசேகரவும், இரு அதிகாரிகளும் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க, கொழும்பில் 11 பேர் கடத்தி காணாமல்போக செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை பெற்ற பிரதிவாதி என்பது குறிப்பிடத்தக்கது.