ரஸ்யாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் இலங்கையில்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

ரஸ்யாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'யாரோஸ்லவ் முட்ரே' மற்றும் 'விக்டர் கொனேட்ஸ்கை' ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வந்துள்ளன.

இந்த நிலையில் இரண்டு கப்பல்களினதும் தலைவர்கள் நேற்று மேற்குப் பிரதேச கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து இரு தரப்பு பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியுள்னனர்

நாளை இந்த கப்பல்கள் கொழும்பில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் கப்பலின் வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.