கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில்லாதவருக்கு கொவிட்-19 வைரஸ்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கனடாவில் தனது நாட்டை விட்டு வெளியேறாத, கொரோனா நோயாளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத நபர் ஒருவருக்கும் கொவிட்-19 எனும் வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நாடுகள் பட்டியலில் மேலும் சில நாடுகள் நேற்றைய தினம் இணைந்துள்ளது.

சீனாவில் தலைதூக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பிரான்ஸ், பிரித்தானிய ஆகிய நாடுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாகரணமாக ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகபெரிய ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.