முல்லைத்தீவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவில் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நகர்பகுதி மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கை தொடர்கின்றதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின், பிரதான வீதிகளில் தொடர்ச்சியாக பல நாட்களாக சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இலங்கை முப்படையினரும் அண்மை நாட்காளாக பாதுகாப்பு நடவடிக்கையினை தளர்த்தியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று முல்லைத்தீவில் வெவ்வேறு இடங்களில் பகுதி நேரங்களாக இரண்டு மணி நேரம் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.