வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் இருந்து நாளை அதிகாலை நாட்டுக்கு வருகைதரும் விமானத்தில் உள்ள பயணிகளிடமிருந்து இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பயணிகளை விசேட பேருந்துகள் மூலம் மட்டக்களப்பு, Batticaloa Campus மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்களை 14 நாட்கள் வீட்டில் தங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

110 நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது


you may like this video