இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானது - 50 வயதுடைய நபர் பாதிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

50 வயதான குறித்த இலங்கையர் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த இலங்கையர் சுற்றுலா வழிக்காட்டியாக தொழில் செய்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலருக்கு சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

நோய் தொற்றுக்குள்ளான நபர் கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


you may like this video