கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நாடுகளிலிருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வந்த 300க்கும் அதிகமானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அனைவரையும் தனிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, விமான நிலையத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சோதனையின் பின்னர் அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தடுத்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை நிராகரித்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு செல்லாமல், 14 நாட்கள் தங்களின் வீட்டிலேயே தங்கியிருப்பதாக கூறி குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். ஒருசிலர் ஏ.சி அறைகள் உட்பட தமக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் மாத்திரமே தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு செல்ல முடியும் என வாதிட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவில் பரிசோதிக்கப்படும் நபர்கள், மட்டக்களப்பில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழத்தில் செயற்படும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.