கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவரின் வீட்டினை சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் கொரொனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி கொழும்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளியின் வீட்டினை கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் வீட்டை கொழும்பு மாநகர சபை பொது மக்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுத்தம் செய்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதுவரை 10 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் மேலும் பலர் கொரோனோ நோய்த் தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று இரண்டு பெண்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டனர். இவர்கள் ஒருவர் இத்தாலியில் இருந்து வருகை தந்த நிலையில், இலங்கையை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக இலங்கையர்களுக்கும் இந்த தொற்று வேகமாக பரவலாம் என்ற அச்சம் காரணமாக அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில், பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் திரையரங்குகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு மேலதிகமாக நாளையதினம் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video