உடன் அமுலுக்கு வரும் வகையில் பல நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்திய இலங்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்குவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

அதற்கமைய கொரியா, ஈரான், இத்தாலி, பஹ்ரேன், கட்டார், பிரான்ஸ், ஸ்பெின், ஜேர்மன், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தாலி, ஈரான், கொரிய நாட்டவர்களுக்கு தற்போது வரையில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சுற்றுலா விசா, இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா உட்பட அனைத்து விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நாட்டவர்கள் நேற்றைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கையினுள் நுழைவதற்கு இடமளிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக மாலைத்தீவு, சிங்கப்பூர் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கிய இலத்திரனியல் வீசா இன்றுமுதல் நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.