எரிபொருள் நிவாரணத்தை வித்தியாசமான முறையில் வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த நிலையில், அதற்கான நிவாரணத்தை வேறு வகையில் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய எரிபொருள் விலையை குறைப்பதற்கு பதிலாக பருப்பு விலை மற்றும் மின்சார விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடந்த 3 மாதங்களில் 50 வீதம் குறைவடைந்துள்ளது. அதன் நிவாரணம் இலங்கை மக்களுக்கு வழங்குமாறு பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் அரசாங்கம் தொடர்ந்து அதனை எரிபொருள் விலையை குறைக்க முடியாதென அறிவித்து வந்தது. எரிபொருள் விலையை குறைத்தால் பொது மக்கள் ஊர் சுற்ற பழகி விடுவார்கள் என அரசாங்கத்தின் செயற்பாட்டாளரான உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எரிபொருளுக்கு பதிலாக பருப்பு மற்றும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் எரிபொருள் விலை குறைவடைந்தமையினால் போக்குவரத்து கட்டணம் உட்பட அனைத்து பொருட்களினதும் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ள போதிலும் மக்களுக்கு பருப்பு மாத்திரமே வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


you may like this video