ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 3700 பேர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 3700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இதில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் ஊடரங்கு சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை தளர்த்தப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை காலை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.