கொரோனா வைரஸை கட்டுப்படுத்த... பொது மக்களிடம் இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in பாதுகாப்பு
1215Shares

பொது மக்கள் தம் மத்தியில் சுகாதார ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று இராணுவம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் என்பதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இதேவேளை முதியோர் விடயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.