இலங்கைக்குள் கொரோனா பரவியது எப்படி? கண்டுபிடிக்கப்பட்ட நோய் தொற்றின் வலையமைப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நூற்றுக்கு, 95க்கும் அதிகமானோர் எவ்வாறு நோய்த் தொற்றுக்குள்ளானர்கள் என விசாரணை குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒரு வலையமைப்பின் ஊடாக வேறு வேறு முறையில் தொடர்புப்பட்டமையினால் இலங்கையினுள் நோய் தொற்று பரவுவதனை தடுக்கும் நிலை உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஊடாக இந்த பரவலை கட்டுப்படுத்த முடியும் என தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையினுள் தொற்று நோய், மேலைத்தேய நாடுகள் போன்று அதிதீவிரமாக பரவும் நிலைமையாக இன்னமும் ஏற்படவில்லை எனவும், இந்த நிலைமையை இதே முறையில் வைத்துக் கொள்ள பொது மக்களின் உதவி மேலும் அவசியமாக உள்ளதென தகவல் வட்டாரங்கள் குறிபிட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணை ஊடாக, அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வலைப்பிற்கமைய, முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா வழிக்காட்டி மூலம் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 பேர் மூலம் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஜேர்மன் மற்றும் பிரித்தானியா சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்கள் இருவர் மூலம் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் இருந்து வந்த 10 பேர் மூலம் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரைக்கு மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வந்த இந்திய நாட்டவர்கள் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் மூவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை தவிர்த்து ஏனைய மூவரும் இலங்கையர்களாகும்.

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவையின் உதவி விமானி மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த இலங்கையர்கள் இருவரும் கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழராகும்.

இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வந்த இலங்கையருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அவரது தாயாராம் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு சுவிஸில் இருந்து வந்து ஆராதனை நடத்திய போதகர் கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்ட பின்னர் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சேதவத்தை பகுதியில் முஸ்லிம் மதத்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகிய 3 நாட்களின் பின்னர் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகுவதற்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகரின் மகனுக்கு கொரோன தொற்று உறுதியாகினதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகாக மார்ச் மாதம் 24ஆம் திகதி விமான டிக்கட் பிரதிநிதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. அவருக்கு கொரோனா தொற்றியது எப்படி என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் மூலம் அவருக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு நெருக்கமாக செயற்பட்ட இராணுவ மேஜர், கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய உதவியாளர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலைய சிப்பாய் மற்றும் IDH வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

மேலும், பிரபல வர்த்தக நிறுவன இயக்குனருக்கும் கொரோனா தொற்றியுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட கொழும்பு தனியார் வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதே முறையில் 65 பேருக்கு கொரோனா நோய் தொற்றிய முறை நேற்று முன்தினம் காலை உறுதியாகிய நிலையில், கடந்த மார் மாதம் 10ஆம்திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 31 பேர் கொரோனா தொற்றிகுள்ளாகியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கமைய 96 பேருக்கு கொரோனா தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 24ஆம் திகதி கந்தக்காடு நிலையத்தில் இரண்டு நோயாளர்கள் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக சேதவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இத்தாலியில் இருந்து வந்த இருவராகும்.

இந்த நிலையில் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒருவரில் இருந்து இன்னும் சிலருக்கு தொற்றித்திரியும் கொரோனாவை அடக்குவதற்காகவே மக்களை வீட்டில் இருக்குமாறு (Stay Home) அறிவித்துவிட்டு அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தியுள்ளது.

எனவே மக்களே உங்களையும் பாதுகாத்து ஏனையவர்களையும் பாதுகாக்க நீங்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பது எவ்வளவோ சாலச் சிறந்தது.

இலங்கைக்குள் கொரோனா பரவியது எப்படி? கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பம் வலையமைப்பு என்பதனை வரைபு மூலம் பார்வையிட...

Latest Offers

loading...