ஊரடங்கு சட்டம் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட தகவல்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் சில பகுதிகளில் இன்று தளர்த்தப்பட்ட ஊரங்குச் சட்டம் இரண்டு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கருதி அதிக ஆபத்தான வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு 2 மணி வரை நீடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய பகுதிகளுக்கு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டு மணி வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. மீண்டும் 30ஆம் திகதி வரை நீடிக்கும் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும்.