யாழ் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலிலுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி வரை அந்த பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து. எனினும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்கும் வகையில் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மட்டும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பேருவளை பகுதியில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...