இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் தமது நாடுகளை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக துறைமுகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளில் இருந்து வந்த 18 வெளிநாட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். மேலும் 7 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு ஜேர்மன் பிரஜைகள், 2 ரஷ்யர்கள், செக் குடியரசை சேர்ந்த மூன்று பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் மார்ச் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 5 இலங்கையர்கள் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.