பொது மக்களின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் முழுமையாக மூடப்பட்ட பல பகுதிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை மக்களின் பொறுப்பற்ற செயலால் நாட்டின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக கூறப்படும் அக்குறன பிரதேசத்தை சேர்ந்த நபரின் மனைவி, மகன் மற்றும் மருமகள் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட போதிலும் கொரோனா தொற்றவில்லை என தெரியவந்துள்ளது.

அக்குறன, அலவத்துகொட, தெலம்புகஹவத்தை பிரதேசத்தில் இந்த கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தினுள் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக அக்குறன பிரதேசத்தில் ஒரு பகுதி முழுமையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் புத்தகளம், கடயன்குளம் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பிரதேசத்தின் கிராமம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ளநபர்கள் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மொரட்டுவ கல்தெமுல்ல பகுதியில் 14 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் 80 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

எனினும் அவருக்கு கொரோனா தொற்றியது எப்படி என்பது இதுவரையில் தெரியவில்லை. எப்படியிருப்பபினும் அவர் வேறு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

தற்போது அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சில பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் பொறுப்பற்ற செயல், சுய தனிமைப்படுத்திக் கொள்ளாமை போன்றவையினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.