இலங்கையில் ஆபத்தான கொரோனா நோயாளிகள்! பாரிய பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான போதும் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாதவர்கள் இருக்க கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாங்கள் அறியாமலே தங்கள் உடலில் வைரஸ் பரவியவர்களினால், அவர்களுக்கு தெரியாமலே சமூகத்திற்குள் வைரஸ் பரவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அவ்வாறான நபர்கள் இருக்க கூடும் எனவும், அது மிகவும் ஆபத்தானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் அவ்வாறான நபர்கள் இருப்பதாகவும் அவர்களினால் பாரிய அளவிலானோருக்கு நோய் தொற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றினால் அவர்களிடம் அறிகுறிகள் தென்படாது. எனினும் அவர் நோய் பரப்பும் மிகப்பெரிய காரணியாக இருப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.