ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய தீர்மானிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலும், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தொடர்பிலும், அத்தியாவசிய சேவை தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.