கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழந்த மூன்றாவது நோயாளி தொடர்பான தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது இலங்கையர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தொடர்பில் சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினமே அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நோயாளியை அடையாளம் கண்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பிய போது உயிரிழந்துள்ளார்.

இந்த நோயாளி நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், நீண்டகாலமாக சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.