பிராந்திய நாடுகளிலிருந்து கொரோனா நோயாளிகள் இலங்கைக்குள் நுழைய முயற்சி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
796Shares

பிராந்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கைக்குள் இரகசியமாக நுழைவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் சந்தேகத்திடமான படகுகள் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான கடல் எல்லையை கேந்திரமாக கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறையில் இந்தியாவில் இருந்து கொரோனா நோயாளிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடற்படையினரால் நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளில் பாதுகாப்பினை தீவிரப்படுத்தி சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.