நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு! பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Report Print Kanmani in பாதுகாப்பு
507Shares

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில் இந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 911ஆக இன்று உயர்ந்துள்ள நிலையில் ஒரே நாளில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.