மாளிகாவத்தையில் நேற்று நடந்தது என்ன? நேரில் பார்த்தவர்கள் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிதி பகிர்வின் போது 3 பெண்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

“அங்கு பணம் பகிரவே கிடைக்கவில்லை. ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒரு பகுதியலும் வந்தார்கள். பெண்கள் வந்த பகுதியிலேயே குழப்பம் ஏற்பட்டது.

இந்த இடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் இருந்தார்கள். ஒருவருக்கு மேலும் ஒருவர் விழுந்த போது குழப்ப நிலை போன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு விழுந்தவர்களை காப்பாற்றுவதற்கு 30 நிமிடத்திற்கும் அதிகமாக நேரமாகியுள்ளது. கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர். பணம் பகிர வந்த செல்வந்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.