கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1055ஆக உயர்வு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை 1055 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றுப் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 5 பேர் கடற்படையினர் எனவும், ஏனைய 15 பேரும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 என்பதாகும்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பகுதியினர் கடற்படைவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.