மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! வெளியான தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் மே மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டு இரவு 8 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னர் போன்றே நீடிக்கப்படும்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் மாற்றமின்றி தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You My Like This Video