நுரைச்சோலை அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு திடீரென ஏற்பட்ட கொரோனா நோய் அறிகுறிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஊழியர்களுக்கு திடீரென காய்ச்சல் மற்றும் ஏனைய நோய் அறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த ஊழியர்கள் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடமைக்கு வந்துள்ள 600 பேரை மீண்டும் வீட்டிற்கு அனுப்பாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

நிலையத்தின் கணக்குகள் மற்றும் மனிதவளப் பிரிவின் ஒன்பது ஊழியர்களுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உட்பட நோய்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த நோய் அறிகுறிகள் அறிகுறிகள் காணப்பட்ட 9 பேர் புத்தளம் வைத்தியசாலையில் விசேட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் குறித்த 9 பேரும் அனல் மின் நிலையத்தில் உள்ள தங்குமிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 60 வீதமான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டினுள் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 3 மாதங்களாக நுலைச்சோலை அனல் மின் நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 30 வீதமானோர் உதவியுள்ளனர்.

எனினும் கடந்த நாட்களாக மீண்டும் வழமையை போன்று ஊழியர்கள் பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.