இலங்கை நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்ல முயற்சி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

நாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்குமாறும் நாடாளுமனறத்தை கூட்டுமாறும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளோம். மக்களின் ஜனநாயகத்திற்காக நாங்கள் அடுத்த தேர்தலில் போராடுவோம்.

நாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக இராணுவ ஆட்சி நோக்கி செல்லவே ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.

அனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.