கொழும்பு - கம்பஹாவில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் போன்று குறித்த இரண்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 23 நாட்களாக சமூகத்திற்குள் எவ்வித கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா நோயாளிகள் வெலிசர கடற்படை முகாம்களிலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிலுமே அடையாளம் காணப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து கம்பஹா மற்றும் கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதில் பயனில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய செவ்வாய்கிழமை முதல் ஏனைய பிரதேசங்களில் இரவில் மாத்திரம் அமுல்படுத்தும் ஊரடங்கு சட்டத்தை கொழும்பு மற்றும் கம்பஹாவிலும் அமுல்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.