இலங்கை முழுவதும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை முழுவதும் இன்றும் நாளையும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் மீள் அறிவிப்பு வரை இரவு மாத்திரம் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மாத்திரே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் ஒரே ஒரு முறை மாத்திரமே நீக்கப்பட்டது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.