இலங்கையர்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஊரடங்கு சட்டம் மற்றும் பயண தடைகள் தளர்த்தப்பட்டாலும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டால் அவற்றில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு கூட்டங்கள் கூட்டுவது, அல்லது கலந்துக்கொள்வது சட்டவிரோத செயலாகும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என்பது கட்டாயமாகும்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் போன்று மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.