வெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்! பொலிஸார் குவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வெளிநாடுகள் சிலவற்றிலிருந்து நாடு திரும்ப முடியாத இலங்கையர்கள் கோபம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் குவைத், மாலைத்தீவு மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாமல் பெருமளவு இலங்கையர்கள் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டு விமான நிலையங்களில் அவர்கள் குழப்பம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களினால் பாதிப்பு ஏற்படும் என கருதி அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த நாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் பலர் உணவு, குடிநீர் மற்றும் தங்குமிடம் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் பெருமளவு இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு பலருக்கு விசா காலாவதியாகியுள்ளமையினால் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து மாத்திரம் 17000க்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வெளிநாடுகளிலிருந்து சுமார் 41 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திருப்ப பதிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களை படிப்படியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.