பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மினுவங்கொட, பல்லபான, துனகஹ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் கல்கிசை - சொய்ஸாபுர பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மறைந்திருப்பதாக பேலியகொடை, குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் சென்றுள்ளார்.

இதன் போது சந்தேக நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேக நபர் 50 வயதுடைய திவுலபிட்டிய பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். அவர் கொலைகள் பலவற்றுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.