PCR பரிசோதனைக்காக 82 கோடி ரூபா செலவிட்ட கோட்டபாய அரசு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் PCR பரிசோதனைக்காக சுகாதார அமைச்சினால் 82 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு PCR பரிசோதனைக்காக 8000 ரூபா செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் 20 நிலையங்களில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரையில் 2000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் இந்த PCR பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.