விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் மீண்டும் உயிர்ப்பெற வாய்ப்புள்ளதா..?? சவேந்திர சில்வா பதில்

Report Print Jeslin Jeslin in பாதுகாப்பு

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மீண்டும் உயிர்ப்பெற வாய்ப்பில்லை. அவ்வாறான ஆயுத போராட்டம் ஒன்று உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை, ஆனால் முயற்சிகளை எடுக்க முடியும் என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஏதேனும் விதத்தில் நாட்டில் மீண்டும் பயங்கரவாத சூழலை உருவாக்க சர்வதேச புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்துக் கொண்டே உள்ளன.

என்ன முயற்சி எடுத்தாளும் புலிகள் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை. விடுதலைப் புலிகள் மட்டுமல்ல நாட்டை குழப்பும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க இராணுவம் தயாராகவே இருக்கின்றது.

மத ரீதியிலான செயற்பாடுகள் எதுவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிக்க இடமளிக்க முடியாது.

இந்த விடயத்தில் நாம் விழிப்புடன் உள்ளோம். இலங்கைக்குள் சில மத குழுக்கள் இன்னமும் ஒரு சில தேசத்துரோக செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்துக் கொண்டுள்ளதை நாம் நன்கு அறிவோம். ஆனால் அந்த முயற்சிகளை நாம் தோற்கடிப்போம் என குறிப்பிட்ளார்.