விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போராளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்! கருணா

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நான் மாத்திரம் போராட்டத்தை நடத்தியவன் அல்ல, நானும் ஒருவன் என்ற வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது குற்றச்சாட்டைத் திணிக்கின்றனர் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

ஏன் யுத்தகாலத்தில் இழப்புக்கள் இடம்பெறவில்லையா? எல்லாப் பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டன என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய காலம் முதல் துரோகி பட்டத்தை சுமந்து வரும் நீங்கள் தற்போது அவர்களையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி விட்டதாக விமர்சிக்கப்படுகிறதே?

பதில் - நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை.

நான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருடனும் எவ்விதத்திலும் முரண்பட்டிருந்ததில்லை.

“என்னால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது. நாங்கள் இப்போராட்டத்தில் இரு்நத விலகிக் கொள்ள வேண்டும்” என்று முடிவெடுத்து நான் ஒதுங்கிக் கொண்டேன்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட போது நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியது துரோகமென்று யாராவது கருதினால் நான் என்ன செய்வது?

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது விடுதலைப் புலிகள் தான் என்றும், நீங்களே அதற்கு சாட்சியம் என்றும் தாங்கள் கூறுகின்ற போதும், தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் அதனை மறுக்கின்றனவே?

பதில் - உண்மையில் இதற்கான பதிலை முன்பு தந்திருக்கின்றேன். இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை ஏற்றிருக்கின்றது? ஆயுதம் தூக்கியது பிழை என்றவர் சுமந்திரன்.

பின்னர் தன்னை கொலை செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் போராளிகளை சிறைக்கு அனுப்பியவர்.

இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் வலியை உணராதவர்கள் எதைத்தான் ஏற்கப் போகின்றனர்? என தெரிவித்துள்ளார்.