கொழும்பு உட்பட மேல் மாகாண மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு உட்பட மேல் மாகாண மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்ட மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் முகக் கவசத்தை உரிய முறையில் அணியாமல் இருந்த 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரை இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக, மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் முகக் கவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் முகக்கவசம் அணியாத ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


you may like this video