வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து! பிரதான வீதிகள் மூடல் - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி வீதி, வெள்ளவத்தையிலுள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியதைதைத் தொடர்ந்து அதற்கு அருகிலுள்ள கடைகளிலும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள தீயணைப்புப் பிரவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

அனர்த்தம் காரணமாக Kurthi_Bazar, Noorani, Ideal_Boutique, Chinese_Gift_Center உள்ளிட்ட சுமார் 5 கடைகள் முற்றாக எரிந்துள்ளன.

வெள்ளவத்தை பகுதியில் பொலிஸ் மற்றும் இராணுவம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

தீ அனர்த்தம் காரணமாக காலி வீதியின் கொழும்பு நோக்கிச் செல்லும் ஒழுங்கை, இராமகிருஷ்ணா சந்தியிலிருந்து W.A. சில்வா மாவத்தை வரை மூடப்பட்டுள்ளதாகவும், கடற்கரை அண்டிய வீதியை (Marine Drive) பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.