இலங்கை தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள தடை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா தடையை நீக்குவதற்கு பிரதானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும் பிரித்தானிய மக்களுக்கு இலங்கை சுற்றுலா மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்னமும் நீக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய நடவடிக்கைக்காக மாத்திரம் பிரித்தானியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா தடை கடந்த 4ஆம் திகதி முதல் நீக்கப்பட்டது. அதற்கமைய உலகின் 67 நாடுகளுக்கு பாதுகாப்பாக சுற்றுலா பணம் மேற்கொள்ள பிரித்தானியா அரசாங்கம் அனுமதி வழங்கியது.

எனினும் இலங்கைக்கு பிரித்தானியர்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.


you may like this..