கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பம்?

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உபுல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தூரநோக்கு பார்வை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய செயற்படாத காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலைமை ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க மூன்று மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video