இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? சமூக மட்டத்தில் மற்றுமொருவர் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த தொற்றாளர், நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான லங்காபுர பிரதேச செயல ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலக அதிகாரியின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமையை சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது.

குறித்த நபருக்கு அருகில் நெருங்கி செயற்பட்டவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கவில்லை. குறித்த நபர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், மற்றுமொரு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video