கொரோனா ஆபத்து குறையவில்லை - சுகாதார பிரிவு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா ஆபத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களை அடையாளம் காணுவதற்கான PCR பரிசோதனைக்கான இதுவரையில் 1.3 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இதுவரையில் குறையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.