ஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத்! விமான பயணங்களுக்கும் தடை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
898Shares

கொரோனா வைரஸ் பரவும் இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது.

குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இந்த அனைத்து நாடுகளையும் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் குவைத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த பட்டியலில் சீனா, ஈரான், பிரேசில், மெக்ஸிகோ, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் உள்ளடங்கும்.

குவைத் நாட்டில் வர்த்தக விமானங்கள் ஓரளவு மீண்டும் இயங்க தொடங்கிய அதே நாளில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது.

குவைத் சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் சுமார் 30 சதவீதம் இயங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர், எதிர்வரும் மாதங்களில் இந்த நடவடிக்கை படிப்படியாக குறைவடையும் என குறிப்பிடப்படுகின்றது.

குவைத்தில் 67,000 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.