கொரோனாவை உடனடியாக குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் கூட போகலாம்? வெளியாகியுள்ள விடயம்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கொரோனாவை உடனடியாக குணமாக்கும் மருந்தொன்று இதுவரை இல்லை, இனியும் வராமல் கூட போகலாம் என்பது போன்ற கருத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து இது போன்றதொரு கருத்தை உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல முயற்சிகள் மூன்றாம் கட்ட பரிசோதனை (மனிதர்களுக்கு வழங்கி சோதனை மேற்கொள்ளும்) கட்டத்தில் உள்ளன.

எனவே நல்ல பலனைத் தரும் பல தடுப்பு மருந்துகள் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய நடைமுறைகளை அரசுகள் மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸை எதிர்க்க முயல வேண்டும். நாடுகள் தங்கள் சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

இதேவேளை தனிமனிதர்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, பாதுகாப்பாக இருமுவது ஆகிய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.