வெளிநாட்டிலிருந்து 401 இலங்கையருடன் நாட்டுக்கு வந்த பாரிய விமானம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை வர முடியாமல் 3 வெளி நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 446 பேர் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் டுபாயிலிருந்து 422 பேர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தல விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர்.

மேலும் சிங்கப்பூரில் தங்கியிருந்த 16 பேரும் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் பிரான்ஸின் பரிஸ் நகரில் இருந்து 8 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.